பட்டா மாறுதல் RSO 31
1. RSO 31 - 5(ii) மற்றும் 8 ன்படி புல உட்பிரிவுக்கு உட்படாத இனங்கள் மற்றும் பிரச்சினைக்குரியவை இல்லாத இனங்களில் பட்டாதாரர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை தற்போது இல்லை. பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் (CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013)
2. RSO 31-6(ii) ன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கப்படும் நிலையில் அவரது வாரிசுகள் அல்லது அனுபவதாரர் பெயரில் உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)
3. RSO 31-7 ன்படி 12 ஆண்டுகளாக நிலத்தின் சுவாதீனம் தன்னிடம் உள்ளது என்று நிரூபிப்பவரின் பெயரில் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)
4. கிரையம் பெற்றவரின் சொத்து விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருந்தால், கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யலாம். (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)
5. நிலத்தை மாற்றம் செய்பவர் பெயரும் 10(1) சிட்டாப்படி பதிவு செய்யப்பட்டவர் பெயரும் வெவ்வேறாக இருந்தால் நிலத்தை வாங்குபவர் மற்றும் விற்பவரை அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும். ஆவணச் சான்றுகள், முந்தைய விற்பனை பத்திரங்கள், கிஸ்தி ரசீதுகள், கிராம நிர்வாக அலுவலரின் நேர்முக சாட்சியங்கள் முதலியவற்றை பரிசீலனை செய்து 10(1) சிட்டாப்படி பதிவு பெற்ற நிலச்சுவான்தாரர் மற்றும் நிலத்தை தன் பெயருக்கு பதிவு மாற்றம் கோருபவர்களுக்கிடையே உள்ள தொடர்பை கண்டறிந்து ஆணை பிறப்பிக்க வேண்டும். (நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம் H 1.113.287/1981, dt - 4.4.1981)
6. பட்டா மாற்றத்தை ரத்து செய்யப்படும் மனுக்களில் அதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் அனுப்பி அவர்கள் பெற்றுக் கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையை சம்பந்தப்பட்ட கோப்பில் வைக்க வேண்டும் (நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம் எண். K4. 16014/1985(சர்வே) dt - 8.2.1986)
7. அனுபவத்தை பிரித்துக் காண்பிக்கும் வகையில் பூமியில் அத்துக்கள் இல்லையென்றாலும் பத்திரத்தில் கண்ட அளவு மற்றும் நான்கெல்லை விவரங்களின் படியும் சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலின் பேரிலும் உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் ஆணை பிறப்பிக்க வேண்டும் (CLA/K2/46562/1984, dt - 12.9.1985)
8. உட்பிரிவு செய்யப்பட்ட பட்டா மாறுதல் இனங்களில் வட்டாட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும் (G. O. MS. NO - 916, C. T & R. E, dt - 23.8.1984)
9. பட்டா பாஸ் புத்தகத்திற்கு மாற்று ஆவணமாக கணினி 10(1) சிட்டா நகலை பயன்படுத்தி கொள்ள வேண்டும். (G. O. Ms. No - 591 Revenue (நி. அ. 1-1), dt - 8.9.2006)
Comments
Post a Comment