பட்டா மாறுதல் RSO 31
1. RSO 31 - 5(ii) மற்றும் 8 ன்படி புல உட்பிரிவுக்கு உட்படாத இனங்கள் மற்றும் பிரச்சினைக்குரியவை இல்லாத இனங்களில் பட்டாதாரர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை தற்போது இல்லை. பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் (CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013) 2. RSO 31-6(ii) ன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கப்படும் நிலையில் அவரது வாரிசுகள் அல்லது அனுபவதாரர் பெயரில் உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013) 3. RSO 31-7 ன்படி 12 ஆண்டுகளாக நிலத்தின் சுவாதீனம் தன்னிடம் உள்ளது என்று நிரூபிப்பவரின் பெயரில் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013) 4. கிரையம் பெற்றவரின் சொத்து விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருந்தால், கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யலாம். (CL...